பொருளடக்கத்திற்கு தாவுக

இந்திய மெய்ஞானிகள் சொன்ன இல்லறம் இதுதான்!

ஜூன் 11, 2010

மெய்யன்பர்களே!

எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையாலும் குருவருளினாலும் மேன் மேலும் நன்மைகள் உண்டாகட்டும். பெறுவதற்கு அரிய பிறவியாகிய மானிடப்பிறவியைப் பெற்றவர்கள், மானிடத்தின் இலட்சியமாகிய மரணமிலாப் பெருவாழ்வாகிய கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் பெருநிலையை அடைவதற்கு வள்ளல் பெருமானார் உலகத்துக்குக் கொடுத்த பெருநெறிதான் இல்லற மார்க்கமாகிய சமரச சுத்த சன்மார்க்க சத்தியத் திருநெறியாகும்.
எல்லா உயிர்களும் நமது ஆன்ம சகோதர, சகோதரிகளே எனச் சமரசமாய்ப் பொதுவென ஒருமையுடன் கண்டு உணர்ந்து அவ்வுயிர்களுக்கு முழு அர்ப்பணிப்பான தூய அன்பாகிய சுத்தத்தில் நிலைத்து, “சத்மார்க்கம் ” என்றும் (சத்-உண்மை, மார்க்கம்-வழி) உண்மை வழியில் வாழ்ந்தால் சத்தியத்தில் (சத்-மெய்ப்பொருள், இயம்-இயைந்து, சத் + இயம் – சத்தியம்) ஒன்றி நின்றால் கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மரணமிலாப் பெருவாழ்வில் நித்தியர்களாய் வாழலாம்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர், அன்புடையர்
என்பும் உரியர் பிறர்க்கு

யான் எனது என்னு செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப்ப படும்
-திருக்குறள்

அற்புதமான மானிடத் தேகத்தை பெற்றவர்கள் 12 வயது வரைக்கும் அருட்பெருஞ்சோதி ஆண்டவரை சோதியாக பாவனை செய்து புருவ மத்தியான ஆக்கினைச் சக்கரத்தில் தியானம் செய்து வரவேண்டும். 12 வயதில் இருந்து 25 வயது வரை ஞான சத்குருவின் அருளினால் நெற்றிக்கண்ணாகிய நடுக்கண்ணை உணர்ந்து, உயிர் எழுத்தாகிய தன்னை அறிந்து, மெய் எழுத்தாகிய தலைவனாகிய பரப்பிரம்மம் என்று சொல்லப்படும் கடவுள் நிலையை உணர்ந்து முக்கண் வடிவில் இருக்கும் ஆய்த (ஃ) எழுத்தை உணர்ந்து, கொடுவினைகளாகிய இரு வினைகளைக் களைந்து, சாகாக்கல்வியோடு உலகியல் அறிவினையையும் அறிந்து உணர்ந்து பிரம்மமாகிய கடவுள் நிலையைச் சார்ந்து ஒழுகுவதே பிரம்மசரியம் ஆகும்.

கோடாயுதத்தால் கொடுவினைக் களைந்தே
-அவ்வையார்

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு
-திருக்குறள்

தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்
பின்னை வினையை பிடித்துப் பிசைவார்கள்
சென்னியில் வைத்த திருவருளாலே
-திருமந்திரம்

12 வயது முதல் 25 வயது வரை பிரம்மத்தை (கடவுளைச்) சார்ந்து தெளிந்த நிலையில் பெற்றோரின், உற்றோரின் வழிகாட்டுதலின்படி தக்கதொரு வாழ்க்கைத் துணையினைத் தேர்ந்தெடுத்து வாழ்க்கைப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகிய திருமணத்தைப் புரிந்து அன்பு என்னும் தூய அர்ப்பணிப்புடன் அறம் என்னும் தன்னை அறிந்து தன் நிலையில் தான் நிலைக்கும் தவத்தை தொடர்ந்து செய்து, தம்பதியினர் ஒருவராகி நாள் இரண்டு, வாரம் இரண்டு, மாதம் இரண்டு, வருடம் இரண்டு என்னும் நல் ஒழுக்க நெறியில் நின்று நன் மக்களை ஈன்றெடுத்து இல்லறமாம் நல்லறத்தை நடத்தி வருதல் வேண்டும்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது – திருக்குறள்

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவது எவன்? – திருக்குறள்

மங்கலம் என்ப மனைமாட்சி; மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு – திருக்குறள்

நாள் இரண்டு – ஒரு நாளைக்கு இருமுறை தடையில்லாமல் மலஜல உபாதிகளைக் கழித்தல்
வாரம் இரண்டு – வாரம் இருமுறை பஞ்சகற்ப சூரணத்தை காய்ச்சிய பசும்பாலில் கலந்து தலைக்குத் தடவி எண்ணெய் தேய்த்துக் குளித்து உடல் சூட்டை சமன் படுத்துதல்

மாதம் இரண்டு – நல் ஒழுக்க நெறி நின்று, தன் துணையுடன் மாத்திரமே புனிதமாக தாம்பத்ய உறவை 42௦ வயது மாதம் இருமுறை செய்தல்

வருடம் இரண்டு – வருடத்திற்கு இரண்டுமுறை அதற்கேற்ற உபாயங்க​ளைக் ​கைக்​கொண்டு வாந்தி, ​பேதி ​செய்து குடல் சுத்தி ​செய்து ​கொள்ள ​வேண்டும்.

பிறன்ம​னை ​​நோக்காப் ​பேராண்​மை
அற​னொன்​றோ ஆன்ற ஒழுக்கு – திருக்குறள்

​பெண்ணின் ​பெருந்தக்க யாவுள கற்​பெனும்
திண்​மை உண்டாகப் ​பெறின் – திருக்குறள்

கற்பு என்ப​தை இருபாலர்க்கும் ​பொதுவில் ​வைப்​போம்
-பாரதியார்

​பெண்ணுடன் ​தேக சம்பந்தம் ​செய்ய ​வேண்டில், முன் ஒரு நாழி​கை பரியந்தம் மனத்​தை ​​தேக சம்பத்தத்தில் ​வையாது ​வேறிடத்தில் ​வைத்துப் பின் சம்பந்தஞ் ​செய்வதற்கு ​தொடங்க​வேண்டும். ​தொடங்கிய ​போது அறிவு விகற்பியாமல் – (​வேறுபடாமல்) – மன முதலிய கரண சுதந்திரத்​தோடு, ​தேகத்திலும், கரணங்களிலுஞ் சூடு ​தோன்றாமல், இடது புறச் சாய்வாகத் ​தேக சம்பந்தம் ​செய்தல் ​வேண்டும். புத்திர​னைக் குறித்த காலத்தன்றி மற்றக் காலங்களில் சுக்கிலம் ​வெளிப்படாமல் இருக்கத் தக்க உபாயத்​தோடு ​தேக சம்பந்தஞ்​செய்தல் ​வேண்டும். அவ்வுபாயமாவது பிராண வாயு​வை உள்​ளேயும் அடக்காமல், ​வெளி​யேயும் விடாமல் நடு​வே உலாவச் ​செய்து ​கொள்ளுதலாம்.

ஒருமு​றை அன்றி அதன்​​மேலும் ​செய்யப்படாது. ​தேக சம்பந்தம் ​செய்தபின், ​​தேக சுத்தி ​செய்து திருநீறணிந்து சிவத் தியானஞ் ​செய்து பின் படுக்க ​வேண்டும். படுக்கும்​போது, இடது ​கை பக்கமாக​வே படுத்தல் ​வேண்டும்.
-வள்ளல் ​பெருமான் அருளிய நித்திய கரும விதி

உண்ணும்​ ​போது உயி​ரெழுத்​தை உயரவாங்கி
உறங்குகின்ற ​போ​தெல்லாம் அது​வேயாகும்
​பெண்ணின்பால் இந்திரியம் விடும் ​போ​தெல்லாம்
​​​​​பேணிவலம் ​மேல்​நோக்கி அவத்தில் நில்லு
திண்ணுங்காய் இ​லை மருந்து அது​வே யாகும்
தினந்​தோறும் அப்படி​யே ​செலுத்த வல்லார்
மண்ணுாழி காலம் தாண்டி வாழ்வார்பாரு
மறலி​கையில் அகப்படவும் மாட்டர்தா​மே
-அகத்தியர் தனி ஞானம்

அருந்து ​போனகமும் பாதியாம்நீர் அதனினும் பாதியாகப்
​பொருந்து நாள் ஒன்றுக்கு ஒரு ​பொழுது அருந்தல் புரிக மற்று
எவ்விடத் ​தெனுந்தான் இருந்திடினும் பின் எழுகினும் புவிமீது
ஏகினும் மாதர்கள்தம்​மைப் பரிந்து கூடினும் ​மெய்ஞான
முத்தி​ரையிற்படிவது ​யோகிதன் பரி​சே
-நிட்டானுபூதி சாரம்

என்னும் ஆன்​றோரின் திருவாக்கி​னை உணர்ந்து தனது வாழக்​கைத் து​ணையிடம் மட்டும் புனித தாம்பத்திய உற​​வை ​மேற்​கொண்டு 40 வயதில் இருந்து 52 வயது வ​ரை 12 வருடக்காலம் அகப்புணர்ச்சியாகிய ஆன்ம, உயிர்கலப்​பை மாத்திரம் தம்பதிகள் ​மேற்​கொண்டு பின்பு தம் பிள்​ளைகளுக்கு திருமணம் ​செய்வித்து, தம்பதி சகிதமாக ஒரு வருட காலம் தனி​மையில் இருந்து தவம் ​செய்து, ​தேக சுத்தியும், ​தேக சித்தியும் ​செய்து, பின்பு தமது இல்லத்தில் இருந்து ​கொண்டு சமுதாய அர்ப்பணிப்பு ​சே​வைக​ளைச் ​செய்து வருதல் ​வேண்டும்.

தானான ​போதமயம் அறியாமற்றான்
தரணிதனில் ​யோகி​யென்று ​பே​ரெடுத்து
வீணான மது மாம்சங்கள் ​கொண்டு
​மெய்ம்மறந்து வாய்புலம்பி வி​சையும் ​கெட்டு
ஓணான இல்வாழ்க்​கை மரபுங் ​கெட்டு
உழன்று மதி​கெட்டு அறிவிழந்து ​போனார்
​தேனான அமுர்தரச பானங்​கொண்டு
தீர்க்கமுடன் இகபரத்தில் ​தெளிந்து நில்​லே

​தெளிந்து ரசங்காயாதி கற்பங்​கொண்டு
தீர்க்கமுடன் இல்லத்​தோடு இருந்து வாழ்ந்து
​தெளிந்து மனதறிவா​லே சிவ ​யோகத்தில்
தீர்க்கமுடன் நின்று பராபரத்தில் ஏகித்
​தெளிந்த சிதம்பர நடனந் தினமும் கண்டு
தீர்க்கமுடன் அண்டபத முடிவில் ஏகி
​தெளிந்து மிகத் தன்மயமாய் விண்​ணை ​நோக்கி
சிவாயகுரு சின்மயமாந் தன்​னைப் பா​ரே
-அகத்தியர் வாதசவும்யம்

நித்திய துறவு –

நித்திய துறவு என்பது அறம், ​பொருள், இன்பம், வீடு இந்த நான்​கையும் நித்தியம் நான்கு காலங்களிலும் ​செய்து அனுபவித்துப் பற்றற்று இருப்ப​தே நித்தியத்​தை அ​டைவதற்கு ஏதுவாக இருக்கின்றது
-வள்ளல் ​பெருமான் அருளிய உப​தேசக் குறிப்புகள்

இவ்வண்ணம் இல்லத்தில் இருந்து ​கொண்​டே, ​மெய்ப்​பொரு​ளை உணர்ந்து அதில் ஒன்றி வாழ்ந்து இப்பிறவி​​லே​யே முத்​தேகச் சித்தி​யைப் ​பெற்று நித்தியர்களாய் வாழ்தல் ​வேண்டும்

-அன்புடன் திருஞானானந்தா
நிறுவனர்
ஞானாலயா வள்ளலார் ​கோட்டம்
​கோ​வை.

(நன்றி ஞான ​ஜோதி மாத இதழ்)
– ​மேலும் விவரங்களுக்கு :
ஞானாலயா வள்ளலார் ​கோட்டம்
வள்ளலார் ​சேவா நி​லையம்
145 . காந்திபுரம், 4வது வீதி
​கோ​வை – 641 012
செல் – 98410 20000

No comments yet

பின்னூட்டமொன்றை இடுக